தொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு

தொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு
தொழில்நுட்ப கோளாறு: ஜிசாட் 1 செயற்கைக்கோள் ஏவுதல் ஒத்திவைப்பு
Published on

பூமியை கண்காணிக்கும் வகையிலான ஜிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஏவப்படுவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ இன்று அறிவித்தது.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இருந்து ஜிசாட்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவிரப்பு வெளியிட்டது. மேலும் ஜிசாட் 1 ஏவப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியிருந்தது.

ஜிசாட்-1 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவிசார் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதுதொடர்பான அதிநவீன புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கும். ஜிசாட்-1 செயற்கைக்கோள் விவசாயம், வனம், தாதுக்கள், இயற்கை பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிக்க உதவும்.

இது பூமியில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்க உதவும். இந்தச் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்டில் ஏவ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com