சந்திரயான் 3 எடுத்த நிலவின் அடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ!

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடைசி முறையாக உயரம் குறைக்கப்பட்ட நிலையில், திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் கடந்த 9ம் தேதி, 4,400 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3ISRO

ஏற்கெனவே நிலவின் காணொளி, நிலவின் ஒரு புகைப்படம் பூமியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தற்போது நிலவின் மற்றொரு புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3 எடுத்த பூமி - நிலாவின் புகைப்படங்கள்! என்ன ஸ்பெஷல்?

இந்த புதிய படமானது நிலவின் பள்ளத்தாக்குகள் தெளிவாக தெரியும் வகையில் எடுக்கபட்டுள்ளது. மேலும் இப்புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள கூலம்ப், போக்ஸோபட், வெப்பர், டைசன் போன்ற பள்ளத்தாக்குகள் தெளிவாக தெரிகின்றன.

சந்திரயான் 3
சந்திரயான் 3 Puthiyathalaimurai

லேண்டரில் உள்ள கிடைமட்ட வேக கேமரா மூலம் நிலவின் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிலை, வேகம் போன்றவற்றை கண்டறியும் கேமரா மூலம் புகைப்படம் எடுத்திருப்பதன் மூலம் லேண்டரில் உள்ள கேமரா சோதனையும் நடைபெற்று முடிந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com