வேற்று கிரகங்களில் மனிதர்களின் குடியேற்றம்.. ஆராய்ச்சியைத் தொடங்கிய இஸ்ரோ

வேற்று கிரகங்களில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான சோதனைகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
isro, mission
isro, missionpt web
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை பூமியை தாண்டி வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக பூமியை தாண்டிய வேறு கிரகங்களில் மனிதர்கள் தங்குவதற்கான குடில்களின் சோதனையை தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் தொடங்கி உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்ததுள்ளது.

அதன்படி, இந்த திட்டம் Human Space flight Centre, ISRO, AAKA Space Studio, University of Ladakh, IIT Bombay, and Ladakh Autonomous Hill Development Council ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனை மூலம் வேற்று கிரகங்களில் மனிதர்கள் தங்கும்போது ஏற்படும் சாவல்களை ஆராய்வதற்காக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

isro, mission
ஈரோடு: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது

எதிர் காலத்தில் வேற்றுகிரகங்களில் மனிதர்கள் குடியேற்றம் செய்யும் பணியின் போது அந்த கிரகத்தின் சூழலுக்கு ஏற்ப அங்கு ஆய்வக அமைப்பிலான குடில்கள் அமைக்கப்பட்டு அதில் மனிதர்களை தங்கவைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் இஸ்ரோவும் இந்த சோதனையில் தற்போது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

isro, mission
திருச்சி: மின்னல் தாக்கியதில் சாலையில் நடந்துச் சென்ற பெண் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com