தேசிய விண்வெளி தினம்: மாணவர்களுடன் கொண்டாடிய இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) சார்பில், முதல் தேசிய விண்வெளி தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கொண்டாட்டப்பட்டுள்ளது.
National space day celebration
National space day celebrationபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - நவீன்குமார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் முதல் தேசிய விண்வெளி தினம் சென்னை பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்டது. 5,000 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு, எஸ்.எஸ்.எல்.வி, பி.எஸ்.வி, மார்க் 3 மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

தேசிய விண்வெளி தினம்:

இஸ்ரோ சார்பில் சந்திராயன் 3 விண்கலம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் நிலை நிறுத்தப்பட்டது. இதையொட்டி "ஆகஸ்ட் 23 ஆம் தேதி ‘தேசிய விண்வெளி தினம்’-ஆக கொண்டாடப்படும்" என பிரதமர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்திய விண்வெளி மையம் சார்பில் முதல் தேசிய விண்வெளி தினமானது, திருவள்ளூர் அருகே அரண்வாயிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று கொண்டாடப்பட்டது.

தேசிய விண்வெளி தினம்
தேசிய விண்வெளி தினம்

இதில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சி, விண்வெளி தொடர்பான தகவல்கள், ரோபோட்டிக்ஸ் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை உணவுக் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன் துவக்கி வைத்தனர்.

National space day celebration
4 முறை UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி இஸ்ரோ விஞ்ஞானி..ஆனாலும் தொடர்ந்து மறுக்கப்படும் பணி! ஏன்?

இதில் எஸ்.எஸ்.எல்.வி.பி. எஸ்.எல்.வி, மார்க் 3 மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். அதேபோல் இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

isro
isroPT

இதனிடையே நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசு கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இளம் தலைமுறையினரை எப்படி மாற்றுவது என்பதற்கான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. உலகிலேயே நிலவின் தென் துருவத்தில் மின்கலத்தை தரை இறக்கியது 4 நாடுகள்தான். அதில் இந்தியாவும் ஒன்று என்பது நமது விஞ்ஞானிகளால்தான் சாத்தியமானது” என்றார்.

ராஜராஜன் - ராதாகிருஷ்ணன்
ராஜராஜன் - ராதாகிருஷ்ணன்puthiya thalaimurai

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன், “இந்த நிகழ்ச்சியின் மூலம் விண்வெளியால் என்னென்ன நன்மைகளை நாம் அடைகிறோம், நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு விண்வெளி எப்படி பயன்படுகிறது, விண்வெளி ஆராய்ச்சிகளை எப்படி படிப்பது உள்ளிட்ட தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

2047 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மட்டுமின்றி நமது அனைவரது கனவாகவும் இருக்கின்றது. இதற்காகத்தான் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com