உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 வரிசை செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் புதிய மாடல் செல்ஃபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி ஐஃபோன்-11, ஐபோன்-11 ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று மாடல்கள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன.
இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 11 மாடல், 50,300 ரூபாய்க்கும், ஐபோன்-11 ப்ரோ மாடல் 72,000 ரூபாய்க்கும், ஐபோன் -11 ப்ரோ மேக்ஸ் மாடல் 80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 மாடல் A13 சிப் திறனுடன் ஃபேஸ் ஐடி, இரட்டை பின்புற கேமரா, 6.1 இன்ச் டிஸ்பிளே, வயர்லஸ் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.
ஐபோன் 11 ப்ரோவில் 5.8 இன்ச் டிஸ்பிளேவுடனும், ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மட்டும் 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மூன்று முன்புற கேமராக்களுடனும் வெளியாகியுள்ளது.
ஐபோன் நிறுவனம் 'Slofies' என்று அழைக்கப்படும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பயன்படுத்தி முன்பக்க கேமரா மூலம் Slow Motion வீடியோக்களை எடுக்கலாம். அதேபோல் பின்பக்க கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்றவாறே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் புதிய மாடம் ஆப்பிள் வாட்ச், மேக்புக் மற்றும் ஐபேட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
விலை நிலவரம்:
iPhone 11:
64GB | Rs. 64,900 |
128GB | Rs. 69,900 |
256GB | Rs. 79,900 |
iPhone 11 Pro:
64GB | Rs. 99,900 |
256GB | Rs. 1,13,900 |
512GB | Rs. 1,31,900 |
iPhone 11 Pro Max:
64GB | Rs. 1,09,900 |
256GB | Rs. 1,23,900 |
512GB | Rs. 1,41,900 |