பிரதமர் நரேந்திர மோடி அறிமுகபடுத்திய பீம் ஆப் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டும் இயங்கி வந்தது. ஆனால் தற்போது ஐஒஎஸ் பயனாளர்களும் பயன்படுத்த கூடிய விதத்தில் மாற்றப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பரிவர்த்தனையை துரிதமாக்க பிரதமர் நரேந்திர மோடி பீம் ஆப்பை அறிமுகப்படுத்தினார். முன்பு ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே பீம் இயங்கி வந்தது.
இந்நிலையில், தற்போது பீம் ஆப் ஐஒஎஸ் தொழிநுட்பம் கொண்ட ஆப்பிள் மொபைல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளை இந்த ஆப்பில் பயன்படுத்தலாம். இதுவரை 35 வங்கிகள் பீம் பயன்பாட்டில் இணைந்துள்ளன. ஒரு நாளைக்கு நமது சொந்த வங்கி கணக்கு மூலமாக ரூ.20,000 வரை பரிமாற்றம் செய்யலாம்.