அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 8

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 8
அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி நோட் 8
Published on

வாடிக்கையாளர்களிடையே அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 8 வெளியிடப்பட்டது. 

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஜி நோட் 8 அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்த ஃபோன், ஐஃபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இந்த ஃபோன் மிட்நைட் பிளாக், மேபிள் கோல்டு, ஆர்சிட் கிரே, டீப் சீ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இது செப்டம்பர் 15ம் தேதி முதல் குறிப்பிட்ட சில சந்தைகளில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் இந்திய மதிப்பு 59,500 ரூபாய் ஆகும். 

இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள்: 

6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 835SoC , 6ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னெல் ஸ்டோரேஜ், 5.0 புளுடூத், 12 மெகாபிக்சல் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, ஆன்டிராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், SoC வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங்,3300mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com