gadget உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நிறுவனம்தான் xiaomi. ஃபோன், டிவி தொடங்கி வீட்டு உபயோகத்துக்கு தேவையான நவீன சாதனங்களை தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கிறது சியோமி நிறுவனம்.
சியோமியின் ஃபோன்கள், பவர் பேங்க்குகள் வெடித்து சிதறி எரிவதை மட்டுமே கண்டிருப்போருக்கு, உலகளவில் தனது வியாபாரத்தை பரவச் செய்திருக்கும் Xiaomi குறித்த சுவாரஸ்ய தகவல்களும் இருக்கின்றன.
அவை என்னவென்று காணலாம்.
’Xiaomi’ இந்த பெயருக்கு சீன மொழியில் சிறிய அரிசி என பொருள் கொண்டதாம். அதாவது சிறிய அளவில் தொடங்கி பெரியளவுக்கு செல்வதுதான் இதோட அர்த்தமாம்.
Xiaomi ங்கற வார்த்தையை விட MI ங்கற வார்த்தைதான் அதிகளவில பயன்பாட்டில் இருக்கும். அந்த MI ங்கற வார்த்தைக்கு மொபைல் இண்டெர்நெட்-னு பொருளாம். ஆனால், பின்னாளில் சியோமி நிறுவனம் MIக்கான அர்த்தத்தை மிஷன் இம்பாசிபிள்னு அழைக்க தொடங்கினார்களாம்.
MI லோகோவை தலைகீழாக பார்த்தால் அது சீன மொழியின்படி ஹார்ட் சின்னமாக தெரியும்.
mi.com என்ற இரண்டெழுத்து கொண்ட Domain-ஐ வாங்குவதற்காக மட்டுமே சியோமி நிறுவனம் 3.6 மில்லியன் டாலர் அதாவது 26 கோடி ரூபாய் செலவழிச்சிருக்கு.
சியோமியின் வணிக நாடாக இந்தியாதான் இருக்கிறது என நினைத்தால் அது முற்றிலும் மாயையே. ஏனெனில் சீனாவில் விற்கப்படும் சியோமி நிறுவன பொருட்களைவிட கால் மடங்குகூட இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லையாம்.
உலகம் முழுவதும் தன்னுடைய வியாபாரத்தை சியோமி நிறுவனம் வைத்திருந்தாலும், அந்நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களுக்கான லாபம் என்னவோ குறைவுதானாம்.
அதனால்தான் MI ஃபோன்களில் விளம்பரங்களை அதிகளவில் கொடுக்கச் செய்து அதன் மூலமா லாபத்தை ஈடுகட்டிட்டு வரதாகவும் கூறப்படுகிறது.
இப்படி செய்வதால் சியோமியோட மொபைல்கள் விற்கப்படவே இல்லையென்றால் அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலமாவே எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறது.
இந்தியாவில் சியோமியின் மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கான கவனம் அத்தனை பிரகாசமாக இருக்கவில்லை. இதனால், flag sale என்ற முறையை ஏற்படுத்தி உடனடியாக விற்று தீரும் வகையில் ஒரு பரபரப்பை கிளப்பி ஆன்லைன் மூலம் சியோமி தனது விற்பனையை தொடங்கியிருக்கிறது.
ALSO READ: