தகவல் தொழில்நுட்பதுறையில் சீரான வளர்ச்சி; ஐடி படித்த இளைஞர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்பத்துறையில் சீரான வளர்ச்சி தென்படுவதால் ஐடி துறையில் படித்த இளைஞர்கள் தேவை
தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம்கூகுள்
Published on

தகவல் தொழில்நுட்பத்துறையில் சீரான வளர்ச்சி தென்படுவதால் படித்து முடித்த இளைஞர்களுக்கான தேவை 5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத்துறையில் 32 விழுக்காடு அளவிற்கு படித்து முடித்த இளைஞர்களுக்கு (FRESHERS) பணி வழங்கப்பட்டுள்ளதாக FOUNDIT என்ற வேலைவாய்ப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐடி படித்து முடித்த இளைஞர்களுக்கான தேவை கடந்த 6 மாதங்களில் 5 விழுக்காடுஅதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறிப்பாக, HARDWARE மற்றும் SOFTWARE துறைகளில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வழங்குவது குறைவாக இருந்ததாகவும், இந்தக் காலாண்டில் படித்து முடித்த இளைஞர்களை பணியமர்த்துவது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gorodenkoff Productions OU

டெல்லியில் அதிகளவாக 21 விழுக்காடு இளைஞர்களுக்கும், பெங்களூருவில் 14 விழுக்காட்டினருக்கும் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது. மும்பை, சென்னை, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் படித்து முடித்த இளைஞர்களில் 8 விழுக்காட்டினருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி கிடைத்திருப்பதாகவும் FOUNDIT தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம் நெல்லை: சாதி மறுப்பு திருமணம் - சிபிஎம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com