கருந்துளை அதிசயம்|நட்சத்திர துகள்வெடிப்பின் பிரமாண்டம்; இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் வெளியிட்ட புகைப்படம்

ஒரு பெரிய கருந்துளை ஒரு நட்சத்திரத்தைத் விடுவித்து மற்றொரு நட்சத்திரத்தோடு மோதும் காட்சிகளை நாசாவின் சந்திரா எக்ஸ்ரே மற்றும் இஸ்ரோவின் ஆஸ்ட்ரோ சேட் ஆகிய தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலமாக புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர துகள் வெடிப்பு
நட்சத்திர துகள் வெடிப்புPT Web
Published on

செய்தியாளர் பால வெற்றிவேல்

இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் மற்றும் நாசாவின் விண்வெளி ஆய்வகங்கள் ஒரு கருந்துளையைச் சுற்றியுள்ள நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வியத்தகு வெடிப்புகளை பதிவு செய்துள்ளது..

ஒரு பெரிய கருந்துளை ஒரு நட்சத்திரத்தைத் விடுவித்து மற்றொரு நட்சத்திரத்தோடு மோதும் காட்சிகளை நாசாவின் சந்திரா எக்ஸ்ரே மற்றும் இஸ்ரோவின் ஆஸ்ட்ரோ சேட் ஆகிய தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலமாக புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர துகள் வெடிப்பு
M87 அண்டம்! பால்வீதியின் மையத்தில் பிரம்மாண்ட கருந்துளை.. பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு

ஆஸ்ட்ரோசாட், இந்தியாவின் முதல் பலஅலைநீளம் கொண்ட விண்வெளி தொலைநோக்கி. நாசாவின் விண்வெளி ஆய்வகங்களுடன் இணைந்து, ஒரு பெரிய கருந்துளையைச் சுற்றியுள்ள நட்சத்திர இடிபாடுகளில் இருந்து வெளியான அசாதாரண வெடிப்புகளை பதிவு செய்துள்ளது.

இவை மிகுந்த ஆற்றல் கொண்ட கொஸ்மிக் வெடிப்புகள், அவை கருந்துளையின் மீதான பொருளின் ஈர்ப்பு மற்றும் அதனால் ஏற்படும் நிகழ்வுகளை வெளிப்படுத்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலே... படத்தின் ஓரத்தில் உள்ள காட்சிகள் சந்திரா எக்ஸ்ரே மற்றும் அஸ்ட்ரோசாட்டால் எடுக்கப்பட்டது. பெரிதாக இருக்கும் புகைப்படம் கருந்துளையின் நட்சத்திர வெடிப்பின் கணினி மெய்நிகரில் உருவாக்கப்பட்டது.

2015ல் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆஸ்ட்ரோசாட் வானியல் தொலைநோக்கி பூமியை சுற்றிக் கொண்டே அண்டவெளிகளில் இருந்து வரும் கதிர்களை பதிவு செய்கிறது. தற்போது நாசாவோடு இணைந்து இஸ்ரோ புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com