இந்தியா உருவாக்கியுள்ள புதிய அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக இ்ந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO கூறியுள்ளது. தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் உள்ள இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை துல்லியமாக பாய்ந்து தாக்கும் வலிமை கொண்டது என DRDO தெரிவித்துள்ளது.
அக்னி ஏவுகணைகள் வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன், அணுகுண்டுகளை சுமந்து சென்று இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை முழுவதும் தங்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என DRDO கூறியுள்ளது.