இந்தியாவால் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாது! - OpenAI CEO கருத்திற்கு டெக் மஹிந்திரா CEO சவால்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ”இந்தியர்கள் ChatGPT போன்ற AI-ஐ உருவாக்க முயற்சி செய்தாலும் அதில் தோல்வியடைவார்கள்” என்று கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
OpenAI CEO Sam Altman
OpenAI CEO Sam Altmantwitter
Published on

OpenAI தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் இந்த வார தொடக்கத்தில் இந்தியா, தென்கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் கூறியபடியே கடந்த வியாழன் அன்று இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.

இந்தியா ChatGPT போன்ற AI கருவியை உருவாக்க முடியுமா?

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சாம் ஆல்ட்மேனிடம், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முன்னாள் கூகுள் துணைத் தலைவரும், தற்போதைய துணிகர முதலீட்டாளருமான ராஜன் ஆனந்தன், இந்தியா சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

Rajan Anandan
Rajan AnandanTwitter

அந்த கேள்வி எழுப்பிய ராஜன் ஆனந்தன் கூறுகையில், “சாம், நாங்கள் இந்தியாவில் மிகவும் துடிப்பான எகோசிஸ்டம் அமைப்பைப் பெற்றுள்ளோம். ஆனாலும் தற்போது AI-ல் கவனம் செலுத்தி வருகிறோம். உண்மையில் இந்தியாவில் AI போன்ற மாதிரிகளை உருவாக்குவதற்கான இடம் எங்கு இருக்கிறது. அப்படி இந்தியாவில் நீங்கள் பார்க்கும் இடங்கள் ஏதாவது இருக்கிறதா? அதை உருவாக்குவதை பற்றி நாங்கள் எப்படி சிந்திக்க வேண்டும். AI தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஒரு குழு இந்தியாவில் எங்கே இருக்கிறது?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இந்தியாவால் AI தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாது! உருவாக்க முயற்சி செய்தாலும் தோல்வியடைவீர்கள்!

ராஜன் ஆனந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சாம் ஆல்ட்மேன், “இது செயல்படும் விதத்தை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். நீங்கள் இதுவரை முயற்சியே செய்யாத அடித்தள மாதிரிகளில் எங்களுடன் போட்டியிடுவது முற்றிலும் நம்பிக்கையற்றது.

இதை உருவாக்க நிச்சயம் முயற்சி செய்ய விரும்புவது உங்களுடைய விரும்பமாகவும், வேலையாகவும் இருக்கலாம். ஆனால் அது மிகவும் நம்பிக்கையற்றது" என்று தெரிவித்தார்.

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது! - சாம் ஆல்ட்மேன் கருத்திற்கு சவால் விட்ட டெக் மஹெந்திரா சிஇஒ!

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாம் தெரிவித்த கருத்திற்கு டெக் மஹேந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சிபி குர்மானி டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

சாம் ஆல்ட்மேனை டேக் செய்து பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், “OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் இந்திய நிறுவனங்கள் அவர்களுடன் போட்டியிட முயற்சிப்பது மிகவும் நம்பிக்கையற்றது என்று கூறியுள்ளார். அன்புள்ள சாம் ஆல்ட்மேன் ஒரு CEO இடமிருந்து மற்றொரு CEOவிற்கு இந்த பதில், சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

சாம் ஆல்ட்மேன் கருத்திற்கு ராஜன் ஆனந்தனும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய தெளிவான பதிலுக்கு நன்றி சாம் ஆல்ட்மேன். நீங்கள் எங்களை “இது நம்பிக்கையற்றது, ஆனால் நீங்கள் எப்படியும் முயற்சி செய்வீர்கள்” என்று கூறினீர்கள். 5000 ஆண்டுகளாக இருந்துவரும் எங்கள் இந்திய தொழில்முனைவோரை, நீங்கள் குறைத்து மதிப்பிட்டதை இது காட்டுகிறது. நாங்கள் முயற்சி செய்ய விரும்புகிறோம்" என்று அவர் பதில் எழுதியுள்ளார்.

நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!- OpenAI CEO சாம் ஆல்ட்மேன்

தான் கூறிய கருத்து சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியநிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சாம் ஆல்ட்மேன். அவருடைய ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருக்கும் அவர், “இது முற்றிலும் என்னுடைய கருத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தோன்றுகிறது. அந்த கேள்வி எங்களுடைய 10 மில்லியன் டாலர் AI உடன் ஒப்பிடுவதாக இருந்தது. அதனால் தான் நான் அப்படி கூறினேன், ஆனாலும் முயன்று பாருங்கள் என்று தான் குறிப்பிட்டேன். எப்படியிருப்பினும் கேட்கப்பட்ட அந்த கேள்வியே தவறானது என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு சரியான கேள்வி, இதுவரை செய்யாத ஒரு புதிய விஷயத்தை உலகிற்கு பங்களிக்கும் வகையில் ஒரு ஸ்டார்ட்அப்பால் எப்படி செய்ய முடியும் என்ற கேள்வியாக தான் இருந்திருக்கும். இந்திய ஸ்டார்ட்அப்களாலும் அதை நிச்சயம் செய்ய முடியும் மற்றும் செய்யும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. AI உருவாக்குபவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com