இந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ

இந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ
இந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ
Published on

இந்தியாவின் முதல் 5ஜி டெக்னாலஜி வீடியோ கால் டெல்லியில் டெமோ சோதனை செய்யப்பட்டது.

தொழில்நுட்ப ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, அடுத்ததாக 5ஜி டெக்னாலஜி வருகைக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் முதல் 5ஜி டெக்னாலஜி வீடியோ கால் டெல்லியில் நடைபெற்ற இந்திய செல்போன் மாநாடு நிகழ்ச்சியில் சோதிக்கப்பட்டது. இந்த டெமோ சோதனையை சுவீடன் நாட்டின் டெலிகாம் நிறுவனமான எரிக்ஸன் மற்றும் அமெரிக்க டெலிகாம் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான குவால்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

இவை இரண்டும் இணைந்து இந்தியாவில் 5ஜி டெக்னாலஜியை கொண்டுவர மும்முரம் காட்டி வருகின்றன. 5ஜி வீடியோ கால் மட்டுமின்றி 4கே வீடியோ ஒளிபரப்பையும், அதிநவீன கேம் பரிசோதனையையும் இந்த நிறுவனங்கள் செய்துள்ளன. கிளவுட் சார்ந்த கேம் சோதனைக்காக சப்-6 GHz மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 5ஜி நெட்வொர்க் 28 GHz முதல் 39 GHz ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் இயங்கும். 

தற்போது இந்த தொழில்நுட்பம் வட அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ஜப்பான், கொரியா போன்ற வளர்ந்த நாடுகள் இந்த தொழில்நுட்பத்திற்காக காத்திருக்கின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com