பகுதி அளவு சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்தது. அதிகாலை 01.05 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திர கிரகணம், 02.24 மணிவரை நிகழ்ந்துள்ளது.
1 மணிநேரம் 19 நிமிடங்கள் வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், ஆசிய கண்டம் மட்டுமல்ல, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்பட்டுள்ளது.
இந்தியாவில், தமிழகம், டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், இந்த சந்திர கிரகண நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.