மும்மொழிகளில் மொழிபெயர்க்கும் நவீன கருவி அறிமுகம்

மும்மொழிகளில் மொழிபெயர்க்கும் நவீன கருவி அறிமுகம்
மும்மொழிகளில் மொழிபெயர்க்கும் நவீன கருவி அறிமுகம்
Published on

ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை பிற மொழிகளில் ஒலி வடிவில் மொழிபெயர்த்து தரும் புதிய கருவியை கொரிய நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது.

மொழி பெயர்ப்புக்கான மொபைல் செயலிகள் அதிகம் உள்ள போதும், இலி டரான்ஸ்லேட்டர் கருவியின் செயல்பாடு சற்று மாறுபட்டிருக்கிறது. இந்தக்கருவியை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்றும், 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம் என்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

USB கேபிள் மூலம் இதன் பேட்டரியை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு நாளில் 10 நிமிடங்கள் வரை மட்டும் பயன்படுத்தும் பட்சத்தில், இதன் பேட்டரியை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதுமானது. இந்தக்கருவியில் குறிப்பிட்ட மூன்று மொழிகளில், ஏதேனும் ஒன்றில் மட்டுமே மொழிமாற்றம் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் சிறிய வார்த்தைகளை மட்டுமே இதன் மூலம் மொழி மாற்றம் செய்ய முடியும்.

முதற்கட்டமாக மூன்று மொழிகளில் அறிமுகமாகியுள்ள இலி ட்ரான்ஸ்லேட்டருக்கு வரவேற்பு அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. பிற மொழிகளுக்கும் இந்தக்கருவியை பயன்படுத்தும் வகையிலான சோதனை முயற்சியில் இருப்பதாக இலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இதன் இருப்பு தீர்ந்துள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.16,205 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த இலி ட்ரான்ஸ்லேட்டரை www.iamili.com என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com