போனில் டைப் செய்ய 12 இந்திய மொழிகள் கொண்ட கீ பேட்

போனில் டைப் செய்ய 12 இந்திய மொழிகள் கொண்ட கீ பேட்
போனில் டைப் செய்ய 12 இந்திய மொழிகள் கொண்ட கீ பேட்
Published on

ஐ.ஐ.டி மும்பை டிசைன் சென்டர் (ஐடிசி) ‘சுவரசக்ரா’ என்ற 12 மொழிகளை கொண்ட ஒரு விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. அண்ட்ராய்டு போன்களுக்கான இந்த விசைப்பலகை பெங்களூரில் வெளியிட்டப்பட்டது. இதுவரை 18 லட்சம் பேர் இந்த விசைப்பலகையை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

வாட்ஸ்அப், பேஸ்புக், ஹைக், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களில் டைப் செய்யும் போது பாதி திரையை விசைப்பலகை மறைத்துக்கொள்ளும். ஆனால் இந்த விசைப்பலகையை பயன்படுத்தும் போது ஒரு போனில் டைப் செய்து அதனை முழு திரையில் மற்றொரு போனில் பார்க்க முடியும்.

இந்தியாவில் 34 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் கணினிகளை விட போனில்தான் டைப் செய்கின்றனர். இவர்களுக்கு இந்த விசைப்பலகை பெரிதும் பயன்படும் என ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசைப்பலகையை ஐ.ஐ.டி மும்பை மாணவர்கள், மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி உட்பட பல நிறுவனங்களில் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com