”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்

”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்
”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்
Published on

5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும் வரை அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல மாட்டேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

5 சதவீதத்திற்கும் குறைவான போலிக் கணக்குகள் இருப்பதை ட்விட்டர் நிறுவனம் நிரூபிக்கும் வரை அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல மாட்டேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு மாறாக, ட்விட்டர் தளத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத போலிக் கணக்குகள் இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் கூறினார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் இந்த காலாண்டில் ட்விட்டர் தளத்தில் சுமார் 5 சதவீத போலிக் கணக்குகள் இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரின் கூற்றுக்களை நிராகரித்து அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார். ஆனால் அவர் ட்விட்டரை கையகப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தெளிவுபடுத்தினார்.

எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்தார். ஆரம்பத்தில் வழங்கியதை விட குறைந்த விலையில் வாங்குவதற்கு இது எலான் மஸ்க்கின் உத்திகள் என்று நம்பப்படுகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்ததிலிருந்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்கு அதன் அனைத்து லாபங்களையும் இழந்தது. திங்களன்று மியாமியில் நடந்த மாநாட்டில் எலான் மஸ்க் கூறுகையில், "அவர்கள் கூறியதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை செலுத்த முடியாது” என்று கூறினார். ட்விட்டர் ஏலத்தை முடிந்தவரை குறைவாகப் பெறுவதை எலான் மஸ்க் ஆராய்கிறார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com