அசத்தலாக இருக்கிறது... இதுதான் அடுத்த தலைமுறை ஐ20.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

அசத்தலாக இருக்கிறது... இதுதான் அடுத்த தலைமுறை ஐ20.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
அசத்தலாக இருக்கிறது... இதுதான் அடுத்த தலைமுறை ஐ20.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
Published on

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகால ஐ 20 வரலாற்றில், கொரியன் கார் தயாரிப்பாளர்கள் 25 லட்சம் யூனிட் கார் மாடல்களை விற்றுள்ளது. அவற்றில் இந்தியா 40 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 6,79,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த கார் போலார் வைட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, பியரி ரெட், ஸ்டேரி நைட், மெட்டாலிக் காப்பர், போலார் வைட் மற்றும் பிளாக் ரூப், பியரி ரெட் மற்றும் பிளாக் ரூப் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இந்த கார் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார், 6 ஸ்பீடு ஐஎம்டி யூனிட், 7 ஸ்பீடு டிசிடி யூனிட், 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மேலும், இந்த காரில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பாக் லைட்கள், முக்கோண வடிவம் கொண்ட பாக் லைட் சரவுண்ட், கேஸ்கேடிங் கிரில் டிசைன், சன்ரூப், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், ஷார்க் பின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சிஇஓ எஸ்.எஸ்.கிம் கூறுகையில், “புதிய ஐ 20 ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹூண்டாய் மீண்டும் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் தரங்களை மறுவரையறை செய்துள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அமைப்பாக, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பை வழங்குவதற்கான அனைத்து புதிய ஐ 20 ஐ உருவாக்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com