உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஹுவேய், டிசம்பர் 2016-ல் ஆப்பிள் ஃபோன்களின் விற்பனையை முந்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஹுவேய் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநர் ஆலன் வாங் இதுகுறித்து பேசும்போது, 'உலக அளவில் கடந்த ஆண்டு ஹுவேய் நிறுவனத்தின் விற்பனை சதவீதம் 13.2 சதவீதம் என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சதவீதம் 12 சதவீதம் மட்டுமே' என்றும் கூறினார்.
இதன் மூலம், உலகின் முதல் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, ஹுவேய் நிறுவனத்தின் ஹானர் வகை ஃபோன்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஹுவேய் நிறுவனம் கடந்த ஆண்டு 13 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்களை ஏற்றுமதி செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா உட்பட 74 நாடுகளில் இந்த ஃபோன்கள் விற்பனையாவதாகவும் ஆலன் வாங் தெரிவித்தார்.