PAN Card தொலைந்துவிட்டால் Duplicate PAN card பெறுவது எப்படி? முழு விவரம்

இந்தியாவை பொறுத்தவரை வரி செலுத்துவதற்கு நிரந்தர கணக்கு எண் (பான்) இருப்பது அவசியம். இது பல்வேறு இடங்களில் அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது. வணிகம் சார்ந்து மற்றும் தனிநபர்களுக்கு பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.
Duplicate PAN card
Duplicate PAN card facebook
Published on

பான் கார்டு தொலைந்துவிட்டால், தனிநபர்கள் புதிய பான் எண்ணைப் பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக, வருமான வரித் துறை மூலம் Duplicate PAN card விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை வரி செலுத்துவதற்கு நிரந்தர கணக்கு எண் (பான்) இருப்பது அவசியம். இது பல்வேறு இடங்களில் அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது. வணிகம் சார்ந்து மற்றும் தனிநபர்களுக்கு பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பான் கார்டு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டவுடன் அது அவருக்கு வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்தும்படியாக இருக்கும். பான் கார்டு தொலைந்துவிட்டால், தனிநபர்கள் புதிய பான் எண்ணைப் பெறத் தேவையில்லை. மாறாக, வருமான வரித் துறை மூலம் Duplicate PAN card விண்ணப்பிக்கலாம்.

Duplicate PAN card என்றால் என்ன?

Duplicate PAN card என்பது அசல் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, பான் வைத்திருப்பவருக்கு வருமான வரித் துறையால் வழங்கப்படும் ஆவணமாகும். பல தனிநபர்கள் கவனக்குறைவாக முக்கியமான ஆவணங்களை தொலைத்துவிடுவதால் சிக்கலாக அமைகிறது. PAN card போன்ற முக்கிய ஆவணங்களை தொலைக்கும்போது அன்றாடம் நடைபெறும் நிதி பரிவர்த்தனையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பான் கார்டை பொறுத்தவரை அது தொலைந்துவிட்டால், Duplicate PAN card-ஐ வருமானவரித்துறை மூலம் நேரடியாக பெறலாம் என்பது சற்றே ஆறுதலான ஒன்று.

Duplicate PAN card-ஐ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • TIN-NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று services என்ற பிரிவில் PAN என்பதை தேர்ந்தெடுக்கவும்.

  • இதில் apply என்ற பிரிவை தேர்ந்தெடுத்த பிறகு, online application form தோன்றும். அதில் கேட்கப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து submit செய்யவும். தொடர்ந்து உங்களது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட இ மெயிலுக்கு விவரம் வந்துவிடும். அதனை பூர்த்தி செய்து, உங்களுக்கு e-PAN card அல்லது physical PAN card இரண்டில் எது தேவை என்பதை தேர்ந்துடுக்கவும்.

  • e-PAN card தேவை என்றால் அது உங்களின் இ மெயிலுக்கு அது வந்துவிடும். physical PAN card தேவை என்றால் உங்களது முகவரிக்கு duplicate PAN card அனுப்பிவைக்கப்படும்.

duplicate PAN card-ஐ offline-ல் விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரபூர்வ NSDL பக்கத்தில் இருந்து "Request for new PAN card or/and changes or Correction in PAN Data" என்ற படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.

  • படிவத்தை கருப்பு மை பேனாவால் , பெரிய எழுத்துக்களில் நிரப்பவும்.

  • 10 இலக்க பான் எண்ணை சரியாக நிரப்பி , உங்கள் கையெழுத்தை சரியாக இடுவதை உறுதி செய்ய வேண்டும்.

Duplicate PAN card
பிரதமருக்கு நைஜீரியாவின் உயரிய விருது.. இதற்கு முன் பிரதமர் பெற்ற உலக நாடுகளின் விருதுகள் என்னென்ன?
  • தனிப்பட்ட நபராக இருந்தால், உங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை இணைக்கவும்.

  • தேவையான ஆவணங்களை கட்டணத்துடன் சேர்த்து NSDL மையத்திற்கு அனுப்பவும். பிறகு 15 இலக்க எண் கொண்ட acknowledgement form உங்களுக்கு கிடைக்கும்

  • தொடர்ந்து NSDL உங்களது விண்ணப்பத்தை வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்புவார்கள். தொடர்ந்து இரண்டு வாரங்களில் உங்களது duplicate PAN card உங்களுக்கு கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com