அறிவோம் அறிவியல் 4 | நட்சத்திரங்கள் மின்னுவது எப்படி தெரியுமா? வளிமண்டலத்தின் சிறப்புகள் என்னென்ன?

நீங்கள் இரவு நேரத்தில் வானத்தை பார்க்கும் பொழுது நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றால் நட்சத்திரங்கள் மின்னாது. அது ஏன்? பார்ப்போம்... இந்த வார தொடரில்!
மின்னும் நட்சத்திரங்கள்
மின்னும் நட்சத்திரங்கள்கூகுள்
Published on

அத்தியாயம் 4

நாம் தினமும் தூங்கி எழும்போது, ‘இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானகோடி கேலக்ஸியில் ஒன்றான நமது பால்வெளி கேலக்ஸியில், அதற்குள் இருக்கும் ஒரு சூரியக்குடும்பத்தில், அதுவும் சூரியனிலிருந்து 92 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பூமியில், அதுவும் இந்தியாவில் இருக்கிறோம்’ என்றா நினைப்போம்? இன்னிக்கு என்ன செய்யலாம், இன்றைய பொழப்பு எப்படி போகப்போகுது... அப்படின்னுதான் நினைப்பு வரும்?. ஆனாலும் நமக்கென ஒரு முகவரி இருப்பதைப் போல பூமிக்கும் ஒரு முகவரி இருக்கும் அல்லவா? அதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? எனில் உங்களுக்காகதான் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு சிறு அலசல்... இங்கே...

நச்சத்திரங்கள் ஏன் ஜொலிக்கின்றன?

நீங்கள் இரவு நேரத்தில் வானத்தை பார்க்கும் பொழுது நட்சத்திரங்கள் எல்லாம் மின்னுவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றால் நட்சத்திரங்கள் மின்னாது. வெள்ளைப் பொட்டுகளாய் தெரியும் அதுக்கு காரணம் தெரியுமா...?

நீங்க கானல்நீர் என்ற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கிறீர்களா.... அதிக வெப்பநாளில் தூரத்தில் தண்ணீர் இருப்பது போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்றால் இருக்காது. இதற்கு அறிவியலில் ஒளி முறிவு அல்லது ஒளி விலகல் என்று கூறுவார்கள். இது ஒரு மாயத்தோற்றம்.

அது போல நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. மின்னுவதைப் போன்று ஒரு பிம்பத்தை கொடுக்கிறது. பூமியின் மேற்பரப்பின் உள்ள வளிமண்டல வெப்பத்தால் நட்சத்திரம் மின்னுவதைப்போல் தெரிகிறது. உதாரணத்திற்கு ஒரு இடத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது... அதன் பின்னால் ஒரு விளக்கு இருக்கிறது. இப்பொழுது எரியும் நெருப்பிற்கு முன்புறமாக நின்று விளக்கை பார்த்தால் விளக்கின் ஒளி மின்னுவதைப் போன்று இருக்கும். இதே கோட்பாடுதான் நட்சத்திரத்திற்கும், தூரத்திலிருக்கும் நட்சத்திரமானது பூமியின் வளிமண்டல வெப்பத்தால் மின்னுவதைப்போன்று தெரியும். இப்பொழுது இருக்கும் கேமராக்களில் ஒளி சிதறலைக்கொண்டு விளக்குகள் மின்னுவதைப்போன்று படம் எடுப்பது வேறு கதை.

பூமியைப்பற்றிய சில தகவல்கள்

இப்பொழுது, நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோள்களைப்பற்றி பார்க்கலாம். அதில் முதலாவதாக நாம் இருக்கும் பூமியை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

நமது பூமியை வளிமண்டல அடுக்கு பாதுகாக்கிறது. இந்த வளிமண்டலமானது அடிவளி மண்டலம், படை மண்டலம், இடை மண்டலம் , வெப்ப மண்டலம், புறவளி மண்டலம். என்று 5 அடுக்குகளைக்கொண்டது. (ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீசோஸ்பியர், தெர்மோஸ்பியர் மற்றும் எக்ஸோஸ்பியர்.)

அதாவது தேங்காய் மேலுள்ள தோலை உரித்து அதன் நாரை உரித்து மேலுள்ள ஓட்டை உடைத்தால் உள்ளிருக்கும் தேங்காயில் நீர் இருப்பதைப்போன்று உள்ளே பூமி இருக்கிறது....! பூமியில் நீர் இருப்பதற்கும் வளங்கள் இருப்பதற்கும் முக்கிய காரணம் வளிமண்டலம்தான். இந்த வளி மண்டலங்கள் இல்லை என்றால் சூரியனின் கதிர்கள் நேராக பூமியின் மேல் பாய்ந்து அதிக வெப்பத்தால் அனைத்து நீர் நிலைகளும் காணாமல் போய் இருக்கும்.

அடிவளிமண்டலம்.

இது பூமியிலிருந்து முதல் அடுக்கு அடிவளிமண்டலம் என்று கூறப்படுகிறது. இதன் எல்லைவரையில் வரையில் காற்று, மேகம், தூசுகள், வாயுக்கள் போன்றவை இருக்கும், வாநிலை மாற்றங்கள் இடி மின்னல் மழை போன்றவை இவ்வடுக்கிலிருந்துதான் உருவாகிறது. அப்படி என்றால் இதை தாண்டினால் மழை கிடையாதா என்றால் கிடையாது.

படை மண்டலம்

இப்பகுதியில்தான் நாம் கூறும் ஓசோன் படலம் இருக்கிறது. இங்கு மிக குறைந்த அளவு காற்று இருக்கும். சலனமில்லா பகுதி.

இடைமண்டலம் இதில் பூமியில் விழும் விண்கற்கல் இப்பகுதியை உராயும்பொழுது தீப்பிடித்து எரிந்துவிடும். அடுத்ததாக

வெப்பமண்டலம் இப்பகுதி சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களை தடுக்கிறது. இதனால் பூமி வெப்பம் அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு இயற்கை பூமிக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு கொடுத்து நம்மை காத்து வருகிறது.

இதேபோன்று பிற கோள்களிலும் பல ஆச்சர்ய தகவல்கள் உள்ளன. அவை குறித்து, அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்...

மின்னும் நட்சத்திரங்கள்
அறிவோம் அறிவியல் 2 | பால்வெளியில் என்னவெல்லாம் இருக்கும்? நட்சத்திரங்களுக்கு வயதானால் என்ன ஆகும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com