இந்த வாரம் அறிவோம் அறிவியலில், விஞ்ஞானிகள் புறக்கோள்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள், அவற்றுக்கு எப்படி பெயரிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
எக்ஸோபிளானெட் (புறக்கோள்) பற்றி ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. ஆகையால் நாம் இதன் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
எக்ஸோப்ளானெட்களைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் ஐந்து முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் தொலைநோக்கி உதவியால் நட்சத்திரங்களை எப்போதும் ஆராய்ந்து வருவார்கள். பொதுவாகவே நட்சத்திரமானது தொடர்ந்து ஒளிர்வதில் சிக்கல் ஏற்படும். அதாவது நட்சத்திரம் ஒளிர்வதை ஏதோ ஒன்று தடுக்கும். எப்படி ஒரு சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியன் ஒளிர்வதை தடுக்கிறதோ அதே போன்று நட்சத்திரத்தை சுற்றி வரும் கோளானது நட்சத்திரம் ஒளிர்வதை தடுக்கும்.
இதை தொலைநோக்கி உதவியால் பார்க்கும்பொழுது, ‘இந்த நட்சத்திரத்தை ஏதோ ஒரு கோள் சுற்றிவருகிறது; ஆக அங்கே ஒரு புறக்கோள் உள்ளது’ என்று கண்டறிவார்கள் விஞ்ஞானிகள். பின் அதை ஆராய்வார்கள்.
அடுத்ததாக ரேடியல் வேகத்தைக்கொண்டு விஞ்ஞானிகள் எக்ஸோப்ளானெட்களை கண்டுபிடிப்பர். அதாவது நட்சத்திரம் ஒளிரும் பொழுது அதன் நிறத்தைக் கொண்டும் அதன் வேகத்தைக் கொண்டும் கண்டுபிடிப்பார்கள். இது ரேடியல் வேகமுறை எனப்படுகிறது.
பிரத்தியேகமாக எக்ஸோபிளானெட்டுகளை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இவ்வகை தொலைநோக்கிகளின் உதவியால் ஆயிரக்கணக்கான எக்ஸோபிளானெட்டுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் 2013ல் கெப்லர் பழுதடைந்ததால் அதன் பணியானது 2018ல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த தொலைநோக்கியானது இதுவரை 2,700-க்கும் மேற்பட்ட எக்ஸோப்ளானெட்களை கண்டுபிடித்துள்ளன.
இதன் அகச்சிவப்பு கருவிகள் எக்ஸோப்ளானெட்டை கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த தொலைநோக்கி TRAPPIST-1 என்ற நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியது.
இது கெப்லருக்கு பதிலாக ஏவப்பட்டது. இந்த சாட்டிலைட் நமது விண்மீன் மண்டலத்தில் மிகவும் பொதுவான நட்சத்திர வகையான பிரகாசமான குள்ள நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் வெளிப்புறக் கோள்களைக் கண்டறியும்.
இப்படிதான் விஞ்ஞானிகள் நமது சூரிய குடும்பத்தை தாண்டியுள்ள எக்ஸோபிளானெட்டை கண்டுபிடித்து அதனை ஆராய்ந்து வருகிறார்கள்.
எக்ஸோப்ளானெட்டின் பெயர்களை முதலில் நீண்டதாக வைத்தார்கள். ஆனால் அது விஞ்ஞானிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே பெயரிடுவதில் மாற்றத்தைக் கொண்டுவந்தனர்.
எக்ஸோப்ளானெட் பெயரின் முதல் பகுதி பொதுவாக அதைக் கண்டுபிடித்த தொலைநோக்கி அல்லது எண்ணைக்கொண்டு இருக்கும். அடுத்ததாக நட்சத்திர குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகத்தின் பெயர் வரும். இது எப்போதும் பி என்றே ஆரம்பிக்கும். அதன்பின் வரும் கிரகங்கள் c, d, e, f என்று பெயரிடுவார்கள்.
எக்ஸோப்ளானெட் சுற்றும் நட்சத்திரம் பொதுவாக "A" ”B", "C" என்று பெயரிடுவார்கள். நட்சத்திரங்களுக்கு பெரிய எழுத்துக்களையும், கிரகங்களுக்கு சிறிய எழுத்துக்களையும் வைக்கின்றனர்.
உதாரணத்திற்கு Kepler-16b என்பதில் "கெப்லர்" என்பது தொலைநோக்கியின் பெயர், 16 என்பது நட்சத்திரத்தின் வரிசை மற்றும் "பி" என்பது நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமான கிரகமாகும்
இப்படிதான் எக்ஸோப்ளானெட்டிற்கு விஞ்ஞானிகள் பெயரிடுகிறார்கள்.