டூவீலர் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் கிராமப்புறத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 'க்ளிக்' என்னும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது.
நாட்டின் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் 10-இல் ஆறு ஸ்கூட்டர்கள் 100 முதல் 110 சிசி பிரிவில் விற்பனையாகின்றன. இந்த பிரிவில் கியர் இல்லாத ஸ்கூட்டர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என நிறுவனத் தலைவர் மினோரு கட்டோ கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வால் மாவட்டத்தில் உள்ள தபுகரா ஆலையில் இந்த ஸ்கூட்டர் தயாராகிறது. முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனையாகும் இந்த ஸ்கூட்டர் பிறகு படிப்படியாக இந்தியா முழுவதும் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த க்ளிக் ஸ்கூட்டரின் விலை ரூ.42,499.
102 கிலோ எடைகொண்ட இந்த க்ளிக் ஸ்கூட்டர், அதிகபட்சம் மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இதன் எரிபொருள் கொள்ளளவு 5.3 லிட்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.