ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரான ஆக்டிவா 5ஜி மாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ‘ஆட்டோ எக்ஸ்போ 2018’ நிகழ்ச்சியின் போது ஹோண்டா ஆக்டிவா 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விற்பனைக்கு வரும் அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ரூ.52,460 விலைகொண்ட இந்த ஸ்கூட்டர், 110 சிசி இன்ஜின் திறன் கொண்டது. அத்துடன் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.
ஹோண்டா டியோ ஸ்கூட்டர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவா பணிக்கு செல்பவர்கள் பயன்படுத்து ஸ்கூட்டராக கருத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆக்டிவா 5ஜி இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இன்ஜின் - 110 சிசி
பெட்ரோல் டேங்க் அளவு - 5.3 லிட்டர்
மைலேஜ் - 45 கி.மீ என கூறப்பட்டுள்ளது.
தொடர் பயணம் - 238.5 கி.மீ
கியர் - இல்லை
ஸ்டார்ட் சிஸ்டம் - செல்ஃப் / கிக்
முன்புறம், பின்புறம் - ட்ரம்ப் ப்ரேக்
எடை - 109 கிலோ
ஹெட் லைட் - எல்இடி
வீல் டைப் - சீட் மெடல்
ஸ்பீடாமீட்டர் - அனலாக் சிஸ்டம்