கேஸ்ஸி கோசிர்கோவ் என்ற தரவு விஞ்ஞானி தொடங்கிய இந்த படிப்பானது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றலின் தொழில்நுட்ப அம்சங்களை ஆழமாக ஆராய்கிறது. இந்த கற்றல் மூலம் வெவ்வேறு அல்காரிதம்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்தி, உங்களால் பல்வேறு அவுட்புட்களை உருவாக்க முடியும் என்பது குறித்து நீங்கள் ஆராய்வீர்கள்.
இந்த படிப்பு குறிப்பாக புதிய AI-ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. கூகுளின் மெஷின் லெர்னிங் லைப்ரரியான TensorFlow-ஐ பயன்படுத்தி, AI ஒன்றை உருவாக்குவது முதல் செயலிழப்பது வரை அனைத்தையும் கற்பிக்கிறது. அடிப்படை அறிமுகத்தில் தொடங்கி நரம்பியல் வலைகளை வடிவமைத்தல் மற்றும் அதற்கு முறையான பயிற்சி செய்வது வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள உதவுகிறது.
Udacity கல்வி அமைப்பு மூலம் வழங்கப்படும், இந்த கோர்ஸ் ஆனது புதியவர்களுக்கானது அல்ல. இது முழுக்க முழுக்க ஏற்கெனவே மெஷின் லெர்னிங்கில் முன் அனுபவத்தை வைத்திருப்பவர்கள், அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களை ஆழ்ந்து கற்றுத்தேர்ச்சி பெற உதவுகிறது. அதாவது தரவு (Data Analytics) ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் (Data Science) மற்றும் பொறியாளர்கள் (Data engineering) கற்றுக்கொள்ள வழங்கப்படுகிறது. இது இயந்திர கற்றல் மற்றும் நரம்பியல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை முழுமையாக கற்பிக்கிறது.
ஆண்ட்ரூ என்ஜி என்ற ஒரு தொழில்துறை நிபுணரால் தொடங்கப்பட்ட கற்பித்தலானது, Coursera என்ற கற்றலை முழுமையாக விவரிக்கிறது. அதாவது Coursera என்ற விரிவான பாடமானது, AI-களுக்கு பேச்சு அங்கீகாரம் மற்றும் இணையத் தேடல் மேம்பாடு உட்பட நிஜ-உலக இயந்திர கற்றல் பயன்பாடுகளை உள்ளடக்குகிறது. இது நேரியல் பின்னடைவு (linear regression), பின் பரப்புதல் (back propagation) மற்றும் MATLAB பயிற்சிகள் போன்றவற்றை முதன்மை தலைப்புகளாக உள்ளடக்கிய தொழில்நுட்பத்தை ஆழமாக ஆராய்கிறது. AI தொழில்நுட்பத்தில் தொழில் வாய்ப்புகளை நாடுவோருக்கு இங்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
edX ஆன்லைன் கோர்ஸ் மூலம் கிடைக்கும் இந்த படிப்பானது, நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் உலகச் சிக்கல்களை தீர்ப்பதற்கான இயந்த கற்றலின் மாதிரிகள், முறைகள் மற்றும் பயன்பாடுகள் சார்ந்து கற்பிக்கிறது. மேலும், அதனுடன் இதுவரை மேற்பார்வையிடப்பட்ட மற்றும் மேற்பார்வை செய்யப்படாத கற்றல் ஆகியவற்றையும் சேர்த்து கற்பிக்கிறது. இந்த படிப்பை முடிக்கும் கால அளவானது வாரத்திற்கு 8-10 மணிநேரத்துடன் மூன்று மாதங்களாக இருக்கிறது.
Nvidia வழங்கும் இந்த படிப்பானது, AI குறித்த கணினி பார்வை (Computer vision) மற்றும் இயற்கை மொழி செயலாக்கத்தின் தொழில்நுட்ப அடிப்படைகளை ஆழமாக ஆராய்கிறது. Nvidia-வால் தயாரிக்கப்படும் கிராஃபிக் ப்ராசசிங் யூனிட்டை (GPU) பயன்படுத்தி, ஒரு பொருளை சரியாக அங்கீகரிப்பது, படத்தை முறையாக வகைப்படுத்துவது என முக்கியமான சூழ்நிலைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதை கற்பிக்கிறது. இந்த கற்றலில் ஒரு பொருள் சார்ந்த கற்றலில் மட்டும் சுமார் எட்டு மணிநேரம் செலவிடப்படுகிறது.
தொழில்நுட்ப புரட்சியை விரிவுபடுத்த உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் MIT வழங்கும் இந்த படிப்பானது, நிஜ உலக பயன்பாட்டில் சுய-ஓட்டுநர் கார்களில் AI-ஐ பயன்படுத்துவதை முழுமையாக ஆராய்கிறது. அதைச்சார்ந்த சென்சார் தரவை விளக்குவது மற்றும் சாலைகளில் செல்ல கற்பிக்கும் இயந்திரங்களை குறித்து கற்பிக்கிறது. MIT ஆனது அதன் டீப்டிராஃபிக் சிமுலேட்டரின் பயன்பாட்டின் மூலம், பிஸியான சூழலில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு உருவகப்படுத்தப்பட்ட காரைப்பற்றி கற்பிக்க மாணவர்களுக்கு சவால் விடுகிறது. இதைச்சார்ந்த அனைத்து விரிவுரை வீடியோக்கள் மற்றும் பயிற்சிகள் குறித்து ஆன்லைனில் அணுகலாம்.