புதிய பணியாளர்களை (Freshers) வரும் 2023 நிதியாண்டில் பணியமர்த்துவதை இரட்டிப்பாக உள்ளதாக ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் இதனை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அந்நிறுவனம் சுமார் இருபதாயிரம் புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
அதில் முதல் மூன்று காலாண்டில் 17500 ஃப்ரெஷர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள எண்ணிக்கைக்கான ஊழியர்களை கடைசி காலாண்டில் நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது ஹெச்.சி.எல். தற்போது இந்நிறுவனத்தில் 1.97 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2021-இல் மட்டும் 38,095 ஊழியர்களை வேலைக்கு சேர்த்துள்ளது ஹெச்.சி.எல் அதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதத்தில் 10,143 ஊழியர்களை வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.