2,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தபோதும் ஐபோன் எந்த பாதிப்பும் இல்லாமல் வீடியோவை பதிவு செய்துள்ளது
பிரேசில் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்டோ காலியோட்டோ என்பவர், ரியோடி ஜெனிரோவில் உள்ள ஒரு கடற்கரையில் ஆவணப்படத்துக்கான படப்படிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமானம் மூலம் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தனது ஐபோன் 6s மூலம் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்திருந்தார்.
எதிர்பாராத விதமாக காற்று வேகமாக வீசியதால், அவரின் கையில் இருந்த ஐபோன் நழுவி கீழே விழுந்துள்ளது. உடனடியாக, Find My app மூலம் ஐபோனை தேடிக் கண்டுபிடித்த அவர்களுக்கு மிகப்பெரிய அதிசயம் காத்திருந்தது.
2,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஐபோன் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தது. ஐபோன் மேல் போடப்பட்டிருந்த ஸ்கிரட்ச் கார்டு மட்டும் சேதமடைந்திருந்தது. மற்றொரு வியப்பான விஷயம் என்னவென்றால், வீடியோ பதிவு செய்து கொண்டே ஐபோன் கீழே விழுந்துள்ளது.
அந்த வீடியோவும் ஒரு இடத்தில் மட்டுமே காட்சிகள் தெளிவாக இல்லை. மற்ற இடங்களில் துல்லியமாகவும் தெளிவாகவும் காட்சிகளை பதிவு செய்துள்ளது.