இந்தியாவில் வீடியோ வெளியிடுவதற்கான தங்கள் கொள்கை மற்றும் விதிகளை பின்பற்றாத வீடியோக்களை தொடர் கண்காணிப்பு மூலம் நீக்கி வருவதாக கூகுள் கூறியுள்ளது.
இதுகுறித்து கூகுள் தெரிவிக்கையில், “கூகுள் பே செயலியில் பணம் செலுத்துவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மண்டல மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மோசடியான பணப்பரிவர்தனை எனத் தெரிய வந்தால், உடனடியாக அவை தடுக்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டில் மட்டும் கூகுள் பே செயலியில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை யூடியூப், கூகுள் பே
உள்ளிட்டவை பின்பற்றுகிறது. இந்த ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் விதிகளை மீறிய 20 லட்சம் வீடியோக்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெறாதபடி அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.