‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்

‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்
‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்
Published on

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேவையான கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

தற்போதைய காலத்தில் அனைத்து தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல், வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகள் கூட ஆன்லைனில் வாங்கிவிட முடிகிறது. அத்துடன் உணவு தேடி ஓட்டல்களுக்கு செல்ல வேண்டாம், உணவு டெலிவரி செய்யும் செயலிகள் ஆர்டர் செய்தால், அரை மணி நேரத்திற்குள் வந்துவிடும். அந்த அளவிற்கு இணையத்தின் சேவை இந்தியாவை ஆக்கிரமித்துவிட்டது. அந்த வகையில் ஒரு முக்கிய இணைய பயன்பாடாக திகழ்வதுதான் கூகுள் மேப்ஸ்.

முன்பெல்லாம் தெரியாத ஒரு ஊருக்கோ அல்லது இடத்திற்கோ சென்றால், அங்கு முகவரியை கண்டுபிடிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது சாலையில் தென்படும் யாரிடமாவது விசாரிக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்றோ நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரையிலும் துல்லியமாக உங்களுக்கு கூகுள் மேப்ஸ் வழிகாட்டிவிடுகிறது. இந்த கூகுள் மேப்ஸ் செயலி மற்றும் சேவையின் பயன்பட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை தக்க வைக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய முன்னெடுப்புக்களை கொண்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய அப்டேட்டை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கூகுள் மேப்ஸ் செயலி அல்லது இணைய சேவையை நீங்கள் திறந்தால் அருகாமையிலிருக்கும் எட்டு இடங்களின் தேடல் வசதியை உங்கள் முகப்பு பக்கத்தில் காணலாம். இதற்குமுன் முகப்பு பக்கத்தில் ரெஸ்டாரன்ட்ஸ், காஃபி, பிரபல கட்டுமான பகுதிகள் மற்றும் கூடுதல் தேடல் ஆகிய நான்கு ஐ-கான்கள் காண்பிடிக்கும். 

ஆனால் தற்போது புதிய வசதியின் மூலம் ரெஸ்டாரன்ட்ஸ், காஃபி, பிரபல மையங்கள், பார்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் கூடுதல் தேடல் என 8 ஐ-கான்கள் காண்பிக்கும். இந்த அப்டேட்டை தற்போது கூகுள் மேப்ஸ்  சோதனை முயற்சியில் செயல்படுத்தியுள்ளது. விரைவில் இது அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com