மொபைல் ஃபோன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
கூகுள் டெஸ் என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் பண பரிவர்தனை முறை கூகுள் நிறுவனத்தால் அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய சந்தைகளுக்கு ஏற்ற வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களும் இவ்வகை சேவை வழங்குவது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த சேவையில் மத்திய அரசின் யூபிஐ திட்டம், பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை நிறுவனங்களும் கூகுள் டெஸ்-க்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.