உலகம் முழுவதும் பலரும் தங்களது செல்போன், கணினி உள்ளிட்டவற்றில் பெரிதும் பயன்படுத்தும் இன்டர்நெட் பிரவுசராக கூகுள் குரோம் இருக்கிறது. இந்த பிரவுசரை கூகுள் நிறுவனம் விற்பனை செய்ய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த சூழலில், அதே நீதிமன்றத்தில், குரோம் பிரவுசரை கூகுள் நிறுவனம் விற்க கட்டாயப்படுத்துமாறு அமெரிக்க நீதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
குரோம் பிரவுசரை கூகுள் விற்பனை செய்தால், பயனர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. உலகளாவிய பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் அமெரிக்காவில் மட்டும் 61 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.