அகராதியை உருவாக்கியவரை டூடுலில் அலங்கரித்த கூகுள்

அகராதியை உருவாக்கியவரை டூடுலில் அலங்கரித்த கூகுள்
அகராதியை உருவாக்கியவரை டூடுலில் அலங்கரித்த கூகுள்
Published on

எளிமையான ஆங்கில அகராதியை உருவாக்கிய ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சனின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது டூடுல் பக்கத்தில் அழகான அனிமேஷன் புகைப்படத்தை அலங்கரித்து கவுரப்படுத்தியுள்ளது. 

source: Google

சாமுவேல் ஜான்சன், 1709 ஆம் ஆண்டு, செப் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். புத்தக வியாபாரியின் மகனான சாமுவேல் கதை, கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். தனது 9 ஆண்டுகால கடும் முயற்சியினால் ஆங்கில அகராதியை இவர் எழுதி முடித்தார். இன்று உலகமே பயன்படுத்தும் அகராதியை வடிவமைத்த சாமுவேலை ’அகராதியின் தந்தை’ என அழைக்கின்றனர். சாமுவேலின் 308 வது பிறந்த தினத்தை கூகுள் நினைவு கூர்ந்துள்ளது. பொருளாதார போராடத்திலும் கவிஞர், கட்டுரை ஆசிரியர், இலக்கிய விமர்சகர், வாழ்க்கை வரலாறு எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட சாமுவேல் ஜான்சன் 1784 மறைந்தார். சாமுவேலின் ஆன்மா மறைந்தாலும் அகராதி வடிவில் இன்றும் பல இல்லங்களில் வாழ்ந்து வருகிறார் சாமுவேல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com