கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
கூகுள் கிடுக்குப்பிடி : ஆப் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
Published on

மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரின் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை மொபைல் ஆப் நிறுவனங்கள் பெற கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது.

உலகெங்கும் இருக்கும் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு கடந்த சில நாள்களாக மன உளைச்சல் தரும் செய்தியாகவே வந்துக்கொண்டு இருக்கிறது. பயனாளர்களின் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் திருட்டுப் போகவிட்டுள்ளது என்ற செய்திதான் அது. இதனால் ஃபேஸ்புக்கே கதி என இருந்தவர்களுக்கு இப்போது தூக்கமே வராமல் போனதுதான் மிச்சம். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கும் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

ஆப்பிள், சாம்சங் போன்ற செல்போன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டதை ஒப்புக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இதனால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளது.

இச்சம்பவம் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அழைப்புகள் (Call Log) எனப்படும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை மொபைல் ஆப் நிறுவனங்கள் பெற கூகுள் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது. அதில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் கட்டாயம் தேவைப்படும் மொபைல் ஆப்புகளுக்கு மட்டுமே விவரங்கள் தரப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

மேலும் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யப்படும் மொபைல் ஆப்புகள் மூலம் தனி நபர்களின் முக்கிய தகவல்கள் வெளியில் கசியவும் வாய்ப்புள்ளதாக புகார்கள் இருந்து வந்தன. வணிக நோக்கத்திற்காக தனி நபர்களின் தகவல்களை மொபைல் ஆப்புகள் பெற்றாலும் அத்தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் இருந்தது. 

புதிய கட்டுப்பாடுகளை கூகுள் அறிவித்துள்ள நிலையில், கூகுளின் இம் மாதிரியான நடவடிக்கை தங்களை கடுமையாக பாதிக்கும் என மொபைல் ஆப் நிறுவனங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. 5 லட்சம் பேரின் தகவல் திருட்டு விவகாரத்தால் கூகுள் நிறுவனம் தனது சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்ஸை மூட உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட கொள்கையை உருவாக்கியுள்ளது.

தகவல்கள் : சேஷகிரி, புதிய தலைமுறை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com