கூகுளின் AI செயலி ’GEMINI’ இந்தியாவில் அறிமுகம் - தமிழ், மலையாளம் உள்ளிட்ட 9 மொழிகளில் செயல்படும்!

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ஜெமினி (GEMINI) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இப்போட்டியில் ஜெமினி (GEMINI) என்ற பெயரில் கூகுளும் களமிறங்கியது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ஜெமினி (GEMINI) செயலி தற்போது கிடைக்கிறது. இந்த செயலி இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, பெங்காலி ஆகிய 9 மொழிகளிலும் செயல்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

gemini ai
gemini ai

இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஜெமினி செயல்படும் என்றும், அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் தகுந்த பதிலை அளிக்கும் என்றும் கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com