பிளே ஸ்டோரில் 10 பில்லியன் டவுன்லோடை கடந்துள்ளது ஜிமெயில் அப்ளிகேஷன்! 

பிளே ஸ்டோரில் 10 பில்லியன் டவுன்லோடை கடந்துள்ளது ஜிமெயில் அப்ளிகேஷன்! 
பிளே ஸ்டோரில் 10 பில்லியன் டவுன்லோடை கடந்துள்ளது ஜிமெயில் அப்ளிகேஷன்! 
Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க லேண்ட்மார்க்கை எட்டியுள்ளது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மொபைல் போன் அப்ளிகேஷன். மிக குறுகிய கால இணைய வரலாற்றில் இந்த மைல்கல்லை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களுக்கான ஜிமெயில் செயலி எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ், கூகுள் பிளே சர்வீசஸ், யூடியூப் மாதிரியான செயலிகள் அடுத்து 10 பில்லியன் டவுன்லோடுகளை கடந்துள்ள நான்காவது கூகுள் நிறுவன செயலியாக ஜிமெயில் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. 

ஜிமெயில் செயலில் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலியாக ஆண்ட்ராய்டு போன்களில் வருகிறது. இருப்பினும் இப்போதுதான் 10 பில்லியன் டவுன்லோடுகளை கடந்துள்ளது. தொடக்கத்தில் ஜிமெயில் செயலி மூலம் மின்னஞ்சல் அனுப்பவும், பெற முடியும் வகையிலும் இருந்தது. 

தொடர்ந்து மேலும் சில மாற்றங்களை செய்தது. அதில் காலண்டர், ஈவெண்ட், மேப் உட்பட கூகுள் நிறுவன சேவைகளை அதில் சேர்த்தது கூகுள். தற்போது மீட் மாதிரியான சேவைகளை ஜிமெயில் செயலியில் பெறவும் முடிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com