அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான சமூக வலைதளங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழுமம் வடிவமைத்துள்ளது.
கடந்த 2021 வாக்கில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உட்பட சில சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது சொந்தமாக ஒரு சமூக வலைதளத்தை அறிமுகம் செய்யும் என தெரிவித்திருந்தது.
“பயனர்கள் என்ன நினைக்க வேண்டும். தளத்தில் யார் இருக்கலாம் அல்லது இருக்கக்கூடாது என்பதை தன்னிச்சையாக எடுக்கும் சிலிக்கான் வேலியிலிருந்து இயங்கி வரும் சமூக வலைதள நிறுவனங்கள் போல இது இயங்காது” என ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழும தலைமை நிர்வாக அதிகாரி Devin Nunes தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் முதல் இந்த அப்ளிகேஷன் முழு பயன்பாட்டிற்கு வரும் மார்ச் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.