இனி ட்ரோன் தான் எல்லாம் - அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் மத்திய அரசு.!

இனி ட்ரோன் தான் எல்லாம் - அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் மத்திய அரசு.!
இனி ட்ரோன் தான் எல்லாம் - அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும் மத்திய அரசு.!
Published on

சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம்( டி.ஜி.சி.ஏ) தனியாக ட்ரோன்ஸ் இயக்குநரகம் அமைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ட்ரோன்கள் சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிப்பதில் இந்த இயக்குநரகம்  கவனம் செலுத்தும்.

இந்தியாவின் வளர்ந்து வரும் ட்ரோன் கொள்கைக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் வகையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) ஒரு பிரத்யேக ட்ரோன்ஸ் இயக்குநரகத்தை அமைக்க நிதி அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இந்த இயக்குநரகத்தின் ஒரே கவனம் இந்தியாவின் ட்ரோன்கள் சுற்றுச்சூழல் அமைப்பை நிர்வகிப்பதில் இருக்கும்.

இது குறித்து பேசிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலாளர் அம்பர் துபே "எட்டு டி.ஜி.சி.ஏ அதிகாரிகளுடன் இந்த இயக்குநரகம் நிறுவப்பட்டது. இது காலப்போக்கில் விரிவாக்கப்படும். இந்தியாவை உலகின் ட்ரோன் தலைநகராக மாற்றுவதற்கான முதல் படியாக இது இருக்கும் ”என்று தெரிவித்தார்

இயக்குநரகம் அதன் சொந்த நிதி பட்ஜெட்டைக் கொண்டிருக்கும். ட்ரோன் பயிற்சி பள்ளிகளை நிர்வகித்தல் மற்றும் நாட்டில் ட்ரோன் சான்றிதழை விரைவாக கண்காணித்தல், மூன்றாம் தரப்பு ட்ரோன் சான்றிதழ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கான பணிகளை இந்த இயக்குநரகம் ஆராயக்கூடும். இந்த ஆண்டு ஜூன் மாதம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆளில்லா விமான அமைப்பு விதிகள், 2020 என்ற வரைவை வெளியிட்டுள்ளது. வரைவின்படி ட்ரோன்களுக்கான அதிகபட்ச வேக வரம்பை 15 மீட்டர் / வினாடிக்கு அமைத்துள்ளது.

ட்ரோன்கள் அதிகபட்சமாக 15 மீட்டர் உயரத்திலும், டிரோன் இயக்குபவரிடமிருந்து 100 மீட்டர் வரம்பிலும் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டத்தில் முழு நாட்டையும் ட்ரோன் மூலமான டிஜிட்டல் வரைபடமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com