இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமானோர் (45 கோடி) அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை உபயோகித்து வருகிறார்கள். இத்தனைக் கோடி பயனர்களுக்கு புதிய முக்கியமான அப்டேட்டை கொண்டு வர இருக்கிறது அந்த நிறுவனம்.
அதாவது ஆண்ட்ராய்டில் இருந்து ஐஃபோனின் iOSக்கு மாறிய பயனர்கள் வெகு நாட்களாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அப்டேட்டைதான் கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார் மெட்டாவெர்ஸின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்.
இது தொடர்பாக கடந்த ஜூன் 14ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மார்க் ஸ்க்கர்பெர்க். அதில், “கடந்த ஆண்டு iOSல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு சாட் ஹிஸ்டரிஸ் மாற்றப்பட்டது போன்று ஆண்ட்ராய்டில் இருந்து iOSக்கு வாட்ஸ் அப்பின் சாட் ஹிஸ்டரியை மாற்றுவதற்கான அம்சத்தை கொண்டு வரப்போகிறோம். அதில் end to end encryption திறனும் பராமரிக்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தாமதமான அறிவிப்பாக இருந்தாலும் வாட்ஸ் அப் பயனர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பெற வேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5க்கு மேலும், ஐஃபோன் 15.5 மேல் இருக்க வேண்டுமாம்.
இதுபோக சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்டில் இருந்து iOSக்கு மாற்ற வேண்டுமென்றால் உங்களது ஆண்ட்ராய்டு போனில் Move to iOS என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
தற்போது எப்படி Android - iOSக்கு சாட் ஹிஸ்டரி, போட்டோஸ், வீடியோஸை மாற்றலாம் என்பதை காணலாம்:
1. தரவுகளை மாற்றுவதற்கு முன்பு, iOS உள்ள ஐபோனை ஃபேக்டரி ரீசெட் செய்திருக்க வேண்டும் அல்லது புதிய ஃபோனாக இருக்க வேண்டும்.
2. move to ios செயலில் Apps & Data வந்ததும் அதில் move data from android கொடுக்க வேண்டும்.
3. iOS ஃபோனில் continue கொடுத்து, move from android screenல் 6 இலக்க எண் வரும்.
4. அந்த 6 டிஜிட் எண்ணை ஆண்ட்ராய்ட் ஃபோனில் பதிவிட்டதும் ஸ்டார்ட் கொடுத்தால் ஆண்ட்ராய்டில் இருந்து ஐஃபோன் இயங்குதளத்துக்கு சாட் ஹிஸ்டரி உள்ளிட்டவை மாறத் தொடங்கும்.
5. ஐஃபோனுக்கு தரவுகள் மாற்றப்பட்டதும் ஆண்ட்ராய்டில் இருக்கும் வாட்ஸ் அப் ஆட்டோமேட்டிக்காக சைன் அவுட் ஆகிவிடும்.
6. iOSல் தரவுகள் மாற்றப்பட்டதும் அதற்கான வாட்ஸ் அப் செயலியை தரவிறக்கம் செய்து வழக்கம் போல பயன்படுத்த தொடங்கலாம்.
ALSO READ: