ஃபேஸ்புக் பயனாளர்களில் 2 கோடியே 90 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களுக்காக எத்தனையோ இணையதளங்கள் வந்தாலும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஃபேஸ்புக் பயனாளர்களை கவரும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனமும் அவ்வப்போது அப்பேட் செய்கிறது. இல்லையெனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை ஃபேஸ்புக் நிறுவனமே வெளியிட்டுள்ளது.
அதாவது ஃபேஸ்புக் பயனாளர்களில் 2 கோடியே 90 லட்சம் பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய தள தாக்குதல் மூலம் சுமார் 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் 2 கோடியே 90 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 1 கோடியே 40 லட்சம் பயனாளர்களின் மிக முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதாவது பிறந்த தேதி, அவர்கள் பார்க்கும் வேலை, படிப்பு, நண்பர்கள் விவரம், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட மிக முக்கியமான விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
ஃபேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி சில ஆப்களிலும் நம்மால் லாக்கின் செய்ய முடியும். அதன்மூலம் ஃபேஸ்புக்கின் தகவல்கள் திருடப்பட்டதா என பல்வேறு கோணங்களிலும் ஃபேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இதனிடையே, ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.