2017ல் டாப் 10 ஃபேஸ்புக் விமர்சனம்!

2017ல் டாப் 10 ஃபேஸ்புக் விமர்சனம்!
2017ல் டாப் 10 ஃபேஸ்புக் விமர்சனம்!
Published on

தற்போது உள்ள வாழ்க்கையில் அரசியல், சினிமா உள்பட அனைத்திலும் சமூக வலைத்தளங்கள் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. அனைத்து சம்பங்களும் டிவி, ஒலிபெருக்கி, செய்தித்தாள்கள் மூலம் மக்களை சென்றடைவதை விட, சமூக வலைத்தளங்கள் மூலம் வேகமாக சென்றடைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகப்படியான மக்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். எந்த ஒரு சம்பவத்தையும் விமர்ச்சிக்கும் தளமாக ஃபேஸ்புக் உள்ளது. குறிப்பாக யாரையும் கிண்டல் செய்யும் (மீம்ஸ்) களமாகவும் அது அமைந்துள்ளது.

ஃபேஸ்புக் 2017ஆம் ஆண்டு இந்திய அளவில் விமர்சிக்கப்பட்ட டாப் 10 (நபர், படம், சம்பவம்) வெளியிடப்பட்டுள்ளது.

  1. பாகுபலி 2: வசூலை வாரிக்குவித்த இந்திய திரைப்படம்
  2. ஜல்லிக்கட்டு: சென்னை மெரினாவில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டம் உலக அளவில் கவனிக்கப்பட்டது
  3. இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஐசிசி சாம்பியன்ஸ் 2017 இறுதிப்போட்டி
  4. சூப்பர்ஃபாஸ்ட் ரயில்: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட அதிகவேக ரயில் குறித்து அதிகம் விமர்ச்சிக்கப்பட்டது.
  5. வினோத் கண்ணா மரணம்: பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா 2017 ஏப்ரல் 27 அன்று உயிரிழந்தார்.
  6. செஸ்டெர் பின்னிங்க்டன் மரணம்: அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான செஸ்டெர் ஜூலை 20ஆம் தேதி உயிரிழந்தார்.
  7. லவகுஷா: பெரிதளவு பேசப்பட்ட தெலுங்கு திரைப்படம்.
  8. யோகி ஆதித்யநாக்: உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.
  9. இந்திய மற்றும் உலக அழகி: மனுஷி சில்லார் இந்திய அழகியாகவும், உலக அழகியாகவும் தேர்வானார்.
  10. கோரக்பூர் துயரச்சம்பவம்: உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com