ஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே உள்ளது. இந்த மொழி AI ரோபோக்களுக்கு மட்டுமே புரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பாப் ரோபோ I can can I I everything else என கூறியதற்கு அலைஸ் ரோபோ Balls have zero to me to me to me to me to me to me to me to me to என பதிலளித்துள்ளது. இரண்டு வாக்கியத்திலும் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் அர்த்தம் நமக்கு புரியவில்லை. எனவே AI ஏஜெண்ட்களை வைத்து இதற்கு பொருள் என்ன என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
photo courtesy: Jaap Arriens/NurPhoto via Getty Images
ரோபோக்கள் “நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்று செல்வது போன்ற உரையாடலையே நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுக்கு பின் பாப் மற்றும் அலைஸ் ரோபோக்களின் செயல்களை ஃபேஸ்புக் நிறுவனம் நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து ஜார்ஜியா டெக் விஞ்ஞானி துருவ் பாத்ரா கூறுகையில், ரோபோக்கள் தெளிவான ஆங்கில மொழியில் தான் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஆங்கில மொழி பயன்படுத்தினால் மட்டுமே ரீவார்டு பாயின்ட்கள் வழங்கப்படும் என்ற கட்டளையை ரோபோக்களுக்கு கொடுத்தால் இப்படி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.