“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு

“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு
“600 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்ட் பாதுகாப்பாக இல்லை” - ஆய்வு
Published on

600 மில்லியனுக்கும் மேலான ஃபேஸ்புக் பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தெரியும் வகையில் இருந்ததாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக் வலைத்தளம். உலகளவில் ஃபேஸ்புக்கில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பயனாளர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். ஃபேஸ்புக் இந்திய மக்களிடம் அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆதரவு பெற்றுள்ளது. ஃபேஸ்புக் தளம் அதிலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிகள் எடுத்துகொண்டு வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. 

இந்நிலையில் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குறித்து Kerbs on Security என்ற வலைத்தளம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 600 மில்லியன் பயனாளர்களின் பாஸ்வார்டுகளை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் எளிதில் படிக்கும் வகையில் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட சில கணக்குகளின் பாஸ்வேர்டுகள் பணியாளர்கள் படிக்கும் வகையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை துறையின் துணைத் தலைவர் பெட்ரோ கானாஹூயடி (Pedro canahuati) வலைப்பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “இந்தப் பாஸ்வேர்டுகள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள எவருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அத்துடன் எமது பணியாளர்கள் யாரும் தேவையின்றி பயனாளர்களின் பாஸ்வேர்டை உபயோகப்படுத்தவில்லை. மேலும் ஃபேஸ்புக் தற்போது இந்தக் குறைப்பாடை சரி செய்துவிட்டது. அத்துடன் பயனாளர்கள் பாஸ்வேர்டுகளை மாற்றுப்படியும் தகவல்கள் அனுப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com