லைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்

லைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்
லைக்குகளின் எண்ணிக்கை தெரியாது - ஃபேஸ்புக்கின் திட்டம்
Published on

லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட்டை கொண்டுவர ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கை உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களை கவரவும், பயன்பபாட்டை எளிதாக்கவும் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. ஃபேஸ்புக்கில் லைக், கமெண்ட், ஷேர் என்பதே பிரதானமாக உள்ளது.

முதலில் வெறும் லைக் என்ற ஒரு ஆப்ஷனை மட்டுமே கொடுத்திருந்த ஃபேஸ்புக், பிறகு எமோஜி வடிவில் 6 ஆப்ஷன்களை கொடுத்தது. இந்நிலையில் லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் புதிய அப்டேட்டை வெளியிட ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது ஃபேஸ்புக் போஸ்டுகளில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியும். இது பலரிடையே பொறாமையை உருவாக்குவதாகவும், பதிவுகள் மீதான தரத்தை லைக்குகள் தீர்மாக்கிறது என்ற பார்வை உருவாவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கவே லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதே வேளையில் பதிவிடுபவர்கள் தங்களுக்கு யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை வழக்கம்போல் பார்க்க முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. சில நாடுகளில் மட்டுமே சோதனையில் உள்ள இந்த இன்ஸ்டாகிராம் அப்டேட் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com