குழந்தைகளுக்கும், இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும் நன்கு பரிச்சமயான சூப்பர் மேரியா விளையாட்டின் 64 வீடியோ கேமின் சீல் உடைக்கப்படாத ஒரு புதிய கேசட், அமெரிக்காவில் 11.62 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற ஏலத்தில் சூப்பர் மேரியோ கேம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஒருவர் 15.6 லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 11,62,00,500 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். உலகின் அதிக விலைக்கு விற்பனையான வீடியோ கேம் என்கிற பெருமையை இந்த சூப்பர் மேரியோ 64 என்கிற கேம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 2ம் தேதி சூப்பர் மேரியோ ப்ரோஸ் 4.92 கோடி ரூபாய்க்கும், ஜூலை 9-ம் தேதி லெஜண்ட் ஆப் செல்டா 6.48 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற ஏலத்தில் சூப்பர் மேரியோ 64 வீடியோ கேம் 11.62 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.