கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!
கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!
Published on

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஆப்பிள் நிறுவனம் கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

மக்களை கவரும் செல்போன்கள், மேக் என எல்லாவற்றிலும் போட்டி நிறுவனங்கள் ஆயிரம் வந்தாலும் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இன்று வரை தனி மதிப்பு உள்ளது. அதன்விலை அதிகம் இருந்தாலும் தயாரிப்பில் இருக்கும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவன பொருட்களை வாங்க மக்களை ஆர்வம் காட்டச் செய்கிறது. புதுப்புது சிறப்பம்சங்கள், அப்டேட்டுகள், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் என ஆப்பிள் நிறுவன பொருட்கள் என்றும் முன்மாதிரியாகவே திகழ்கிறது.

இந்நிலையில் கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டிம் குக் புதிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார். 

அதன்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விளம்பர இடையூறின்றி பார்க்கும் விதத்தில் ஆப்பிள் டிவி ப்ளஸ் (APPLE TV PLUS ) என்படும் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள நெட்பிலிக்ஸ், அமேசான், கூகுள் ஆகியவற்றுக்கு போட்டியாக இச்சேவை இருக்கும் எனத் தெரிகிறது.

ஆப்பிள் நியூஸ் ப்ளஸ் (APPLE NEWS PLUS) என்று அழைக்கப்படும் செயலி வாயிலாக பிரபல செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களை எளிதாக படிக்க முடியும். மாதத்திற்கு 10 டாலர் தொகையை செலுத்தி இச்சேவையை பெறலாம். கேம் பிரியர்களை கவரும் வகையில், ஆப்பிள் ஆர்கேட் எனும் செயலி‌, அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த சேவை முதல்கட்டமாக 150 நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்க வாழ் மக்களுக்காக டிஜிட்டல் பேமண்ட் வசதியும், கிரடிட் கார்ட் வசதியையும் ஆப்பிள் நிறுவனம் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com