செய்தியாளர் பால வெற்றிவேல், ஜெயஸ்ரீ அனந்த்
நூறு வருடங்களுக்கு முன்பு நட்சத்திரங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து போகும் பட்சத்தில் அது என்னவாகும் என்கிற கேள்வி எழுந்தது.
அதற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் இந்திய விஞ்ஞான சந்திரசேகரன் வரை பலரும் தங்களது கணித தேற்றத்தில் மூலம் கிடைத்த கருத்துருவாக்கங்களை வெளியிட்டனர்.
அவர்களின் பலரும் நட்சத்திரங்களின் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற எரிபொருட்கள் தீர்ந்த பிறகு அவை சுருங்கும் என்றும் அந்த சுருக்கம் மிகப்பெரிய காந்தப்புலத்தை உருவாக்கி கருந்துளையாக மாறும் என கூறினர்.
அதாவது, நட்சத்திரங்கள் தன்னுள் எரிபொருள் (ஹைட்ரஜன், ஹீலியம்) இருக்கும்வரை அணுக்கரு இணைவு (Nuclear Fusion) காரணமாக, வெப்பத்தையும், ஒளியையும், தொடர்ந்து கொடுத்துவரும். அது தான் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் தங்களுக்குள் இருக்கும், எரிபொருள் தீர்த்து முடிந்தபிறகு தன்னுடைய மொத்த தொகுதியும் சுருங்கி அடர்த்தி அதிகரித்து சில வெள்ளை குள்ளன்களாகவும், சில நட்சத்திரங்கள் கருந்துளைகளாகவும் மாறுகிறது.
இந்நிலையில், கருந்துளைகள் அருகில் செல்லும் எந்த ஒன்றையும் அது தனக்குள் இழுத்துக் கொள்ளும். ஒளியை கூட! அதற்குக் காரணம், அபரிமிதமான ஈர்ப்பு விசை.
மாறாக நமது சூரியன் தன்னுள் இருக்கும் எரிப்பொருளை தீர்த்ததும் வெள்ளைக்குள்ளனாக மாறும், கருந்துளையாக மாறாது. காரணம், சூரியனின் நிறையைக் காட்டிலும் 1.44 மடங்கு (Chandrasekhar Limit) பெரிதாக உள்ள நட்சத்திரங்களே கருந்துளையாக மாறும் என்று தமிழ்நாட்டில் பிறந்த வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் நிரூபித்து, 1983ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசையும் பெற்றுள்ளார். இது இப்படியிருக்க...
நாம் வாழும் அண்டமான பால் வழி அண்டத்தில் மையப் பகுதியில் இருக்கும் கருந்துளையின் காந்தப்புலத்தின் படத்தை சர்வதேச விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து டெலஸ்கோப் மூலம் படம் எடுத்துள்ளனர். சாஜிட்டாரியஸ் A என அழைக்கப்படும் கருந்துளையின் காந்தப்புலம் பால்வழி அண்டத்திலேயே மிகவும் வலிமையான காந்த அமைப்பை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் டெலஸ்கோப் வருகைக்குப் பிறகுதான் கருந்துளை என்கிற ஒன்றை முதல் முறையாக படம் எடுக்க முடிந்தது.
2017 ஆம் ஆண்டு சர்வதேச விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் Event Horizon Telescope எனும் திட்டத்தில் கீழ் நமது பால்வழி கண்டம் மூன்றே இருக்கும் மற்றொரு அண்டமான M87 என்கிற அண்டத்தில் இருக்கும் கருந்துளையை படம் எடுத்தது. நமது அண்டத்தில் கருந்துளை இருக்கும் போது ஏன் அதை முதலாவதாக வேறு அண்டத்தின் கருந்துளையை படம் எடுக்க வேண்டும் என கேட்கலாம், அதற்கு பதில் M87 கருந்துளையின் அளவு மிகப் பெரியதாக இருப்பது தான் காரணம். நமது சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ப்ளூட்டோ வரை இருக்கும் தொலைவையும் விட மிகப்பெரியது M87 கருந்துளை. இதற்குப் பிறகாக 2022 ஆம் ஆண்டு நமது பால் வழி அண்டத்தில் இருக்கும் சாஜிட்டாரியஸ் A கருந்துளை படம் எடுக்கப்பட்டது உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியது.
கருந்துளையின் முதற் படம் விஞ்ஞானிகளிடையே பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டது. குறிப்பாக கருந்துளையை சுற்றி இருக்கும் ஈவென்ட் ஹரிஜான் (வட்ட பகுதி) தான் எனப்படும் வட்டுப் பகுதியில் இருக்கக்கூடிய காந்தப்புலத்தின் செரிவு என்னவாக இருக்கும் என்பதுதான். ஏனெனில் ஒளி கூட ஊடுருவ முடியாத கருந்துளையின் காந்தப்புல வலிமையை கண்டறியும் பட்சத்தில் அதன்மூலம் கருந்துளையில் பண்பு பலன்களையும், அவற்றின் கட்டமைப்பு உருவாக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காக தான்.
இந்நிலையில் தான் நமது பால்வழி அண்டத்தில் இருக்கும் சாஜிட்டாரியஸ் A கருந்துளையின் காந்தப்புல செறிவை Event Horizon Telescope படம் எடுத்துள்ளது. பூமியில் இருந்து 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கருந்துளையில் விளிம்பிலிருந்து சுழலும் வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காந்தப்புலங்கள் டெலஸ்கோப்பால் படம் எடுக்கப்பட்டுள்ளன.
பால்வீதியின் மையத்தில் உள்ள கருந்துளைக்கு அருகில் வலுவான, முறுக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காந்தப்புலங்கள் உள்ளன என்பதோடு மட்டுமல்லாது கருந்துளையை சுற்றியுள்ள வாயுக்களின் மாற்றங்களையும் கண்டறிய முடியும் என கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் உலகில் உள்ள 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இணைந்து Event Horizon Telescope திட்டத்தில் பணியாற்றினர். சுமார் ஏழு வருடங்களாக பால்வழி அண்டத்தின் மையப் பகுதியில் இருக்கும் கருந்துளையை நோக்கி டெலஸ்கோப் பல தரவுகளை சேகரித்தது. விஞ்ஞானிகளில் பல்வேறு கட்ட இமேஜிங் ப்ராசஸ் -க்கு பிறகு சாஜிடேரியஸ் ஏ கருந்துளையில் காந்தப்புல செறிவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருந்துளையின் செயல்முறைகள், நிறை, அளவு மற்றும் சுற்றியுள்ள சூழலில் வேறுபாடுகள் போன்றவற்றை அறிய முடியும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒளியின் பண்புகள், அண்டத்தின் உருவாக்கம், காலங்களைக் கடந்து செல்லுதல் போன்ற அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.