சிட்னி உரையாடலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜனநாயக நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவை எங்கள் இளைஞர்களைக் கெடுக்கக்கூடிய தவறான கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம். ஜனநாயகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அவசியமானது, அது தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், வர்த்தகம், முதலீடு மற்றும் பொது நலன்களை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம், அது தவறான கைகளில் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.