உடைந்தால் தானாக ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு

உடைந்தால் தானாக ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
உடைந்தால் தானாக ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
Published on

உடைந்தால் மிக எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்களின் ஒரே தலைவலி டிஸ்ப்ளே அடிக்கடி உடைவதுதான். சில ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளேக்கள் 2 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் எளிதாக உடைந்துவிடக் கூடியது. உடைந்த டிஸ்ப்ளேவை சரி செய்ய, பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் கிட்டத்தட்ட ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவரும் அவதிப்பட்டிருப்பார்கள். 

இந்தக் கவலை இனி உங்களுக்கு இல்லை. டிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர். பாலிஈதர்-தியோரியஸ் (polyether-thioureas) என்ற எடை குறைந்த பொருள் மூலம் இந்த டிஸ்ப்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தாலோ, விரிசல் விழுந்தாலோ, மிக எளிதாக நமது இரு விரல்கள் மூலம் அழுத்துவதன் மூலமே ஒட்டி விடலாம்.

பொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்டவைக்க, அதிக அளவு வெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட முடியும். ஆனால், பாலிஈதர்-தியோரியஸால் உருவாக்கப்படும் ட்ஸ்ப்ளேக்களை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம். 

இங்கிலாந்தில் 21 சதவீதத்தினர் உடைந்த டிஸ்ப்ளேவுடனே ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பாலிஈதர்-தியோரியஸ் வகை டிஸ்ப்ளேக்கள் சந்தைக்கு வந்தால், அனைவரும் நிம்மதி அடைவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com