ஐஃபோன் 8 மாடல்களில் திறன்மிக்க சிறிய பேட்டரிகள்?

ஐஃபோன் 8 மாடல்களில் திறன்மிக்க சிறிய பேட்டரிகள்?
ஐஃபோன் 8 மாடல்களில் திறன்மிக்க சிறிய பேட்டரிகள்?
Published on

ஐஃபோன் 7, 7 ப்ளஸ் மாடல்களை விட ஐஃபோன் 8, 8 ப்ளஸ் மாடல்களின் பேட்டரிகள் சிறிதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஃபோன் நிறுவனத்தின் 8, 8 ப்ளஸ் ஆகிய புதிய மாடல்கள் வரும் 22 ஆம் தேதியன்று வரவிருக்கின்றன. இவற்றின் பேட்டரிகள் ஐஃபோன் 7, 7 ப்ளஸ் போன்களுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஃபோன் 7ல் உள்ள 1,960 ஏ.எம்.எச் திறனுக்கு பதிலாக, ஐஃபோன் 8-ல் 1,821 ஏ.எம்.எச் திறனும், ஐஃபோன் 7 ப்ளஸில் உள்ள 2,900 ஏ.எம்.எச் திறனுக்கு பதிலாக ஐஃபோன் 8 ப்ளஸில் 2,675 ஏ.எம்.எச் திறனும் கொண்ட சிறிய ரக பேட்டரிகள் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.

உருவத்தில் சிறிதாக இருப்பினும் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய வகையில் இவற்றின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான சாம்சாங் கேலக்ஸி நோட் 8 மாடலில் சிறிய ரக பேட்டரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் சிறிய ரக பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் ஐஃபோன் 8, 8 ப்ளஸ் மாடல்கள் 2 மற்றும் 3 ஜிபி ரேம் மெமரியுடன் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால் இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com