அறிவோம் அறிவியல் 11 | ஆங்காங்கே தோன்றி மறையும் புயல்... 16 நிலவுகளுடன் ஜொலிக்கும் நெப்டியூன் கிரகம்!

இந்த வாரம், நெப்டியூன் கிரகம் குறித்து பார்ப்போம்...
நெப்டியூன் கிரகம்
நெப்டியூன் கிரகம்நாசா
Published on

நெப்டியூன் நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் எட்டாவது கிரகமாகும். இது சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ளது. எத்தனை தொலைவு என்றால்... சூரியனிலிருந்து பூமியின் தொலைவைப்போல் 30 மடங்கு தொலைவில் இருக்கிறது. ஆகையால் இது சாதாரணக் கண்களுக்கு தெரியாது.

பொதுவாக ஒரு கிரகத்தின் நிறத்தை வைத்து அதில் என்னென்ன தனிமங்கள் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்கின்றனர். அதன்படி நீல நிறத்தில் காணப்படும் இந்த நெப்டியூனில் மீத்தேன் உள்ளதாக கூறுகின்றனர். இதுவும் யுரேனஸும் கிட்டத்தட்ட ஒரே கிரகத்தைப்போன்றது.

நண்பகல் சூரியன்

சூரியனை விட அதிக தூரம் இருப்பதால் இங்கு நண்பகல் சூரியன் மிகவும் மங்கலாக தோன்றும். ஒரு பொருளை அருகில் பார்க்கும் பொழுது அளவானது பெரிதாக தோன்றும் அதே பொருளை தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது சிறியதாக தோன்றும். இதே லாஜிக்தான் நெப்டியூனிலும், சூரியனிலிருந்து நீண்ட தொலைவு நெப்டியூன் தள்ளி இருப்பதால் அதில் தெரியும் சூரியனானது மிகவும் சிறியதாக ஒளிக்குறைந்து காணப்படும். இதனால் அங்கு வெப்பமும் மிகக்குறைவு. சொல்லப்போனால் பனி அடர்ந்து இருக்குமாததால் இதை பனிக்கிரகம் என்றே சொல்லலாம்.

பூமியை போல உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இங்கு இருக்கிறதா என்று கேட்டால், இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு என்று கேட்கத்தோன்றும். பனி பிரதேசத்தில் எப்படி உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கமுடியும்?

சரி, இதன் தூரம் மற்றும் அளவு என்ன என்று பார்க்கலாம்...

நெப்டியூன் கிட்டத்தட்ட 49528 கி.மீட்டர் விட்டத்தைக்கொண்டது அதாவது பூமியை விட நான்கு மடங்கு அகலம் கொண்டது.

சுழற்சி மற்றும் சுற்றுப்பாதை:

நெப்டியூனில் ஒருநாள் என்பது சுமார் 16 மணி நேரம் மட்டுமே. ஆக, இதுவும் யுரேனஸைப்போல அதிவேகமாக சுழலக்கூடியது. அதேபோல் அங்கு ஒரு வருடம் என்பது சுமார் 60,190 நாட்கள்... அங்கு ஒரு வருடம் வருவதற்குள் இரண்டு தலைமுறை வந்துவிடும்.

நெப்டியூன் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது. இதனால் ஒரு இடத்தில் சூரியனை விட வெகு தொலைவாகவும், ஒரு இடத்தில் சூரியனுக்கு அருகிலும் வருகிறது. அப்படி அருகில் (அருகில் என்றால் அருகில் இல்லை...) வரும் சமயம் சில கிரகங்கள் குறிப்பாக புளூட்டோவை அருகில் சந்திக்கும்.

பருவநிலை

இதன் அச்சு 28 டிகிரி சாய்ந்த நிலையில் உள்ளது. இது செவ்வாய் மற்றும் பூமியின் அச்சு சாய்வினை போன்று காணப்படுகிறது. அதனால் அங்கும் பருவநிலை காணப்படும். இந்த பருவநிலை ஒவ்வொன்றும் 40 வருடங்கள் இருக்கும்.

நெப்டியூன், அதன் நிலவு.
நெப்டியூன், அதன் நிலவு.

நிலவு:

நெப்டியூனில் 16 நிலவுகள் இருக்கின்றன. இதில் இருக்கும் ட்ரைட்டன் என்ற சந்திரன் மிகப்பெரியது. 1846ல் வில்லியம் சாசெல் என்பவரால் இந்த நிலவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ட்ரைட்டன் நிலவுதான் சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய நிலவு. இந்த ட்ரைட்டனின் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 391 டிகிரி பாரன்ஹீட் ஆகும். வாயேஜர் 2 ட்ரைட்டனில் மெல்லிய வளிமண்டலம் இருந்ததை கண்டுபிடித்தது.

மோதிரங்கள்

நெப்டியூன் குறைந்தபட்சம் ஐந்து முக்கிய வளையங்களையும் நான்கு முக்கிய வளைய வளைவுகளையும் கொண்டுள்ளது. இதற்கு காலி, லெவர்ரியர், லாசெ, ஆர்க்ஸ் மற்றும் ஆடம்ஸ் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு உள்ளனர்.

இதில் உள்ள ஆர்க்ஸ் எனப்படும் வளையத்தில் விசித்திரமான தூசிகள் இருக்கிறது. லிபர்டே, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தைரியம் என்ற நான்கு முக்கிய வளைவுகள் வெளிப்புற ஆடம்ஸில் காணப்படுகின்றன.

உருவாக்கம்

இது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஈர்ப்பு விசை சுழலும் வாயு மற்றும் தூசியை இழுத்து பனி ராட்சதமாக மாறியதாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள். சூரிய குடும்பத்தின் மற்ற பகுதிகள் உருவானபோது நெப்டியூன் உருவாகி இருக்கிறது.

நெப்டியூனின் பெரும் பகுதி பனிக்கட்டியாக இருந்தாலும் இதில் நீர் மீத்தேன் அமோனியா ஆகியவை திரவமாக உள்ளது என்கிறார்கள்.

வாயேஜர் 2 எடுத்த படம்
வாயேஜர் 2 எடுத்த படம்

மேற்பரப்பு

திடமான நெப்டியூன் மேற்பரப்பை கொண்டிருக்கவில்லை. அதன் வளிமண்டலம் ஹைட்ரஜன் ஹீலியம் மற்றும் மீத்தேன் ஆகியவற்றால் ஆனது. இவை அதிக ஆழம் வரை நீண்டும் இருக்கிறது.

வளிமண்டலம்

இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் சிறிதளவு மீத்தேனால் நிரம்பி இருக்கிறது. இங்கு காற்றானது மணிக்கு 2000 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது என்கிறார்கள்.

1989ல் நெப்டியூனின் தெற்கு அரைக்கோளத்தில் ஒரு பெரிய ஓவல் வடிவ புயல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புயல் பின்னர் மறைந்து விட்டது. ஆனால் இது போன்று புதிய, புதிய புயல்கள் தோன்றி மறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காந்த மண்டலம்

நெப்டியூனின் காந்தப்புலத்தை முக்கிய அச்சு கிரகத்தின் சுழற்சி அச்சுடன் ஒப்பிடும்போது சுமார் 47 டிகிரி சாய்ந்துள்ளது. யுரேனஸைப் போலவே, இதன் காந்த அச்சு சுழற்சியின் அச்சில் 60 டிகிரி சாய்ந்திருக்கும். நெப்டியூனின் காந்த மண்டலம் இந்த தவறான சீரமைப்பு காரணமாக ஒவ்வொரு சுழற்சியின் போதும் மாறுபாடுகளுக்கு உட்படுகிறது. சொல்லப்போனால் நெப்டியூனின் காந்தப்புலம் பூமியை விட 27 மடங்கு சக்தி வாய்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com